துருக்கி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மையில்லை: மீண்டும் தேர்தல்?

Date:

துருக்கிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேவையான வாக்கு எண்ணிக்கையை தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனும். போட்டியாளர் கிளிக்டரோக்லுவும் பெறவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இரண்டாம் கட்ட தேர்தலை நடத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. மே 28ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வாக்கு எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கை பெற்றாலே அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். யாருமே 50 வீத வாக்கை பெறாத பட்சத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும்.

தற்போது உத்தியோகபூர்வ அரச ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை எந்த ஒரு வேட்பாளரும் குறைந்தது 50 சதவீத வாக்குகளைப் பெறாத முடிவை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.

தேர்தல் முடிவுகளின் தொடக்கத்தில், தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் முன்னிலை வகித்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் நெருக்கமான நிலையே காணப்படுகிறது.

இதுவரை, அரச செய்தி ஊடகமான அனடோலு ஏஜென்சி மற்றும் டிஆர்டி வேர்ல்ட் அனைத்து வாக்குப் பெட்டிகளிலும் 92.00 சதவீதமானவை எண்ணப்பட்டதன் அடிப்படையில் எர்டோகன் 49.76 சதவீதமும், கிளிக்டரோக்லு 44.48 சதவீதமும் பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், கிலிக்டரோக்லு 47.70 சதவீதமாகவும், எர்டோகன் 45.80 சதவீதமாகவும் இருந்ததாக எதிரணி ஆதரவு Anka செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்