29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

உயிர் போகும் நிலையிலும் என் கையைப் பற்றி கேட்ட காதலி: காதலன் உருக்கம்

இரவு 10.30 மணியளவில் யானை வந்தது. யானை நம் அருகில் வராது என்று நினைத்துக் கூடாரத்திற்குள் பதுங்கி இருந்தோம். ஆனால் யானை நெருங்கி வந்து, கூடாரத்தை மிதித்தது. கவீஷாவின் நெஞ்சிலும், வயிற்றிலும் யானை மிதித்தது என அவரது காதலன் தனுஷ்க மதுஷன் களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொஸ்லந்த , மேல் தியலும பிரதேசத்திற்கு சுற்றுலா வந்து, கூடாரம் ஒன்றில் இரவைக் கழித்த காதலியும் காதலனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். இதில் காதலி தருஷி கவீஷா (23) உயிரிழந்திருந்தார்.

அவர், மாத்தறை கேகனதுறை சில்வர்கஸ்டில் வசிப்பவர். வாரியபொல பகுதியைச் சேர்ந்த காதலன் தனுஷ்க மதுஷன் களுஆராச்சி காயமடைந்திருந்தார்.

உயிரிழந்த தருஷி கவீஷாவின் மரண விசாரணையின் போது காதலரான தனுஷ்க மதுஷன் களுஆராச்சி தெரிவித்ததாவது-

நாங்கள் இருந்த இடத்தில் தொலைபேசி சிக்னல் இல்லை. நண்பருக்கு அழைப்பு ஏற்படுத்த பலமுறை முயற்சித்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.சிக்னல் இருக்கும் இடத்திற்கு தவழ்ந்து தவழ்ந்து வந்து, காலை 5.30 மணி அளவில் நண்பர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தனர்.

நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கவீஷா தாதிய பயிற்சியாளராக உள்ளார்.

மாலை 5.30 மணியளவில் மேல் தியலும பகுதிக்கு வந்தோம். ஒரு வழிகாட்டி தொடர்பு கொண்டு, அழைத்து வந்தார். அவருக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தினேன்.

பிரதானா சாலையில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சியுள்ள இடத்துக்கு வந்தோம். சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்தோம். அதன்பிறகு நாங்கள் இரவு அங்கேயே தங்குவதென முடிவு செய்தோம்.

இரவு 10.30 மணியளவில் யானை வந்தது. சத்தம் வராமல் கூடாரத்திற்குள் பதுங்கியிருந்தோம். கூடாரத்துக்கு அருகில் யானை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் யானை அருகில்  வந்து கூடாரத்தை மிதித்தது. கவீஷாவின் வயிற்றிலும், நெஞ்சிலும் யானை மித்தது. எனது .இடது கையையும் மிதித்தது. கவீஷா கஸ்டப்பட்டு  பேசிக்கொண்டிருந்தார். காயமடைந்த எனது இடது கையை குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டார். என் நண்பர்களிடம் பேச நிறைய முயற்சி செய்தேன்.
ஆனால் முடியவில்லை.

தவழ்ந்து தவழ்ந்து சென்று தொலைபேசி சிக்னல் இடத்துக்கு சென்று காலையிலேயே நண்பர்களை தொடர்பு கொள்ள முடிந்தது.  காலை 6:30 மணியளவில், கிராம மக்களும் 1990 களில் வந்தவர்களும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்றார்.

இந்த மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்தியர் சானக ரொஷான் பத்திரன மேற்கொண்டார். காட்டு யானை தாக்கியதில் நெஞ்சு மற்றும் வயிற்றில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் திடீர் மரணம் என்று அவர் முடிவு செய்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment