அனாதை இல்லங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை கடத்தி ஹெரோயின் போதைக்கு அடிமையாக்கி அவர்களின் உடலின் சில பாகங்களை எரித்து பிச்சை எடுக்க பயன்படுத்திய பெண் ஒருவரை மே 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அனாதை இல்லங்களிலிருந்து சுமார் இருபது சிறுவர்களை சந்தேகநபர் தனது சொந்த குழந்தையை பயன்படுத்தி கடத்திச் சென்று பேலியகொட பிரதேசத்தில் வீதிகளில் பிச்சையெடுக்க வைத்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பதினொரு வயதுடைய இந்த குழந்தை ஹட்டன் பகுதியைச் சேர்ந்தது எனவும் அம்பேபுஸ்ஸவிலுள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து சந்தேகநபரின் குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் குழந்தைக்கு ஹெரோயின் என அடையாளம் காணப்பட்ட வெள்ளைப் பொருளைக் குடிக்க வற்புறுத்தியதாக வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, குழந்தை தற்போது ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
குழந்தையை வைத்தியர்கள் பரிசோதித்ததையடுத்து, ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் என்பது மருத்துவக் கருத்து என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குழந்தையின் உதடுகளிலும் இடது காலின் பெருவிரலிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆசனவாயில் இரண்டு ரூபா நாணயத்தின் அளவு எரிந்த தடயங்கள் காணப்படுவதாகவும் வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் குழந்தையிடம் வாக்குமூலம் பெற்றதில், பாதிக்கப்பட்ட குழந்தையை ஹெரோயின் குடிக்கச் செய்து அவரது உடல் உறுப்புகள் எரிக்கப்பட்டதாகவும், குழந்தைகளை பிச்சைக்காரர்களாக பயன்படுத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த பெண் குழந்தையுடன் ஒபேசேகரபுர பிரதேசத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது, குறித்த குழந்தை அவளது இல்லை என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் குழந்தை சிறுவர் இல்லத்தில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தை இல்லத்தில் தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், சந்தேகநபரின் குழந்தையுடன் தப்பிச் சென்றதாகவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.பேலியகொட நுகே வீதியைச் சேர்ந்த நிலுகா பிரியதர்ஷினி என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.