மீரா ஜாஸ்மின் தமிழில் ரீ-என்ட்ரியாகிறார்!

Date:

நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை மீரா ஜாஸ்மின் நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் அவர் படங்கள் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது மீண்டும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் ரீ- என்டி கொடுப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்