பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்..
இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கான், துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ருவிட்டர் கணக்கு, ஊழல் வழக்கில் கான் கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறது.
“காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று இஸ்லாமாபாத் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ருவிட்டர் கணக்கு குறிப்பிடுகிறது.
.”இம்ரான் கானின் கார் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது,” என்று கானின் உதவியாளர் ஃபவாத் சவுத்ரி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தாமல் கூறினார்.
தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் அறிக்கையை உறுதிப்படுத்தக் கோரிய கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
பாகிஸ்தானின் மூத்த இராணுவ அதிகாரியொருவர் தன்னை கொல்ல முயன்றதாக இம்ரான் கான் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனை இராணுவம் விமர்சித்த. இந்த விடயத்தை நீதிமன்றத்தி எதிர்கொள்ள சவால் விடுத்தது.
Rangers abducted PTI Chairman Imran Khan, these are the visuals. Pakistan’s brave people must come out and defend their country. pic.twitter.com/hJwG42hsE4
— PTI (@PTIofficial) May 9, 2023
70 வயதான கான், வார இறுதியில் ஒரு பேரணியில், குறைந்தபட்சம் இரண்டு கொலை முயற்சிகளுக்குப் பின்னால் இராணுவம் இருப்பதாக குற்றம் சாட்டினார்., பாகிஸ்தானின் உள் பாதுகாப்பை மேற்பார்வையிடும் ISI இன் இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ் அல்லது ஐஎஸ்ஐயின் மூத்த அதிகாரி இதன் பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஏப்ரல் 2022 இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து, உடனடியாக தேர்தலை நடத்தக் கோரி பாகிஸ்தான் முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறார். அவரது பேரணிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவினால் உற்சாகமடைந்துள்ளார்.
மக்களின் அமோக ஆதரவினால் அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இம்ரான் கான் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.
“இந்த சோடிக்கப்பட்ட மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை, வருந்தத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை“ என்று திங்கள்கிழமை பிற்பகுதியில் கானை நோக்கி இராணுவம் ஒரு அரிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக இது ஒரு நிலையான முறையாகும், இதில் இராணுவ மற்றும் புலனாய்வு முகமை அதிகாரிகள் அரசியல் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக தூண்டுதல்கள் மற்றும் பரபரப்பான பிரச்சாரங்களால் குறிவைக்கப்படுகிறார்கள். குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
Imran Khan’s lawyer badly injured inside the premises of IHC. Black day for our democracy and country. pic.twitter.com/iQ8xWsXln7
— PTI (@PTIofficial) May 9, 2023
கான் இந்தக் கூற்றுக்களை முன்வைப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளே தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக குற்றம்சாட்டினார். அவர்கள் மறுத்தனர்.
பாகிஸ்தானின் வரலாற்றில் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டுகள் முழுமையாக பதவியில் இருந்ததில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் நீடித்த பலர் நாடுகடத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். சமீபத்தின உதாரணம் பெனாசிர் பூட்டோ. இம்ரான் கான் மீதான தாக்குதலை போல, நவம்பர் 2007 இல் ஒரு பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாக ராணுவம் கூறியது. இராணுவம் கானை நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தால், கான் தற்போது நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் வழக்குகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் பெற்ற அரசுப் பரிசுகளை விற்றதன் மூலம் வருவாயை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நாளை புதன்கிழமை குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.