கருக்கலைப்பு செய்யாதால் குழந்தையை தாக்கிய கணவன்: நடிகை புகார்!

Date:

15 மாத குழந்தைகளை கண்மூடித்தனமாக தாக்கியதாக தனது காதல் கணவர் மீது சீரியல் நடிகை புகாரளித்துள்ளார்.

இந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சந்திரிகா சாஹா. அவர் முன்பு ஒருவரை திருமணம் செய்து 2020 இல் விவாகரத்து பெற்றார்.

2020 முதல் தொழிலதிபர் அமன் மிஸ்ராவும், சந்திரிகாவும் காதல் வசப்பட்டு, இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சந்திரிகா கர்ப்பமானார். கருக்கலைப்பு செய்யுமாறு காதலன் அமன்  வற்புறுத்தினார். ஆனால் சந்திரிகா சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குழந்தை பிறந்த பிறகும் சண்டை சச்சரவு தீரவில்லை.

சந்திரிகாவுக்கும் அமானுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. அப்போது குழந்தைக்கு 14 மாதங்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை, நடிகை சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குழந்தை அழும் சத்தம் கேட்டது. வேலையில் இருந்ததால் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி, கணவரிடம் கேட்டுள்ளார்.

கணவர் குழந்தையை தூக்கிக் கொண்டு, படுக்கையறைக்குள் சென்றார். இம்முறை குழந்தை கதறி அழுது கொண்டிருந்தது. குழந்தையை அடிக்கும் சத்தமும் கேட்டது.

இதனால் சந்தேகமடைந்த சந்திரிகா, அறைக்குள் சென்று பார்த்த போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்துள்ளது. உடனடியாக அவர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தார்.

மறுநாள் சந்தேகம் அடைந்து சிசிடிவியை சோதனை செய்தபோது கணவர் செய்த அட்டூழியத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது மகனை கணவரே மூன்று முறை அடித்தார். இந்த வீடியோவின் அடிப்படையில், நடிகை தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்