ஹொட்டலில் இளைஞனுடன் தங்கியிருந்த 16 வயது சிறுமியின் சடலம் நிர்வாணமாக மீட்பு!

Date:

காலி வீதி களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் கிடப்பதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமி மேலும் ஒரு பெண்  மற்றும் இரண்டு ஆண்களுடன் நேற்று மாலை ஐந்து மாடி ஹோட்டலுக்கு வந்து இரண்டு அறைகளை வாடகைக்கு கேட்டதாகவும், அவர்களுக்கு மூன்றாவது மாடியில் இரண்டு அறைகள் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய சிறுமியுடன் இருந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்