மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

Date:

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்து சென்று குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் மரணமான சம்பவம் மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்