‘பத்திரனவின் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பவில்லை’: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்குவாட்

Date:

சென்னை சுப்பர் சிங்ஸ் அணிக்காக ஆடி வரும் இலங்கையின் மதீஷ பத்திரனவின் பந்து வீச்சை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை என சென்னை அணியின் சக வீரர் என்று ருதுராஜ் கெய்குவாட் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடந்த இப்போட்டியில் சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சென்னை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன்.

இந்நிலையில், போட்டிக்கு பின் சென்னையின் அதிரடி துடுப்பாட்டக்காரர் ருதுராஜ் கெய்குவாட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரனவின் பந்து வீச்சு குறித்து ருதுராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கெய்குவாட், வலைபயிற்சியின் போது பத்திரன வீசிய 10 முதல் 12 பந்துகளை மட்டுமே நான் சந்தித்தேன். அப்போது அவரின் பந்து வீச்சை சந்திக்கக்கூடாது என முடிவு செய்து விட்டேன். அவரது பந்து வீச்சை அடிப்பது, அவரது பந்து வீச்சை முடிவு செய்வது கடினமானது. முதலில் பந்து எங்கு உள்ளது என உங்களுக்கு தெரிய வேண்டும். பந்து எங்கிருந்து வருகிறது என தெரிய வேண்டும். இரண்டாவது என்னவென்றால் பந்து வீச்சின் லெந்த்தை கண்டறிவதாகும். அவர் பந்து வீச்சை சந்திக்கும்போது நீங்கள் எப்போதும் சற்று காலதாமதமாக பந்தை சந்திப்பீர்கள். நல்ல விஷயம் என்னவென்றால் அவர் எங்கள் அணியில் உள்ளார்’ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்