‘நான் ரொனால்ட்டோ ரசிகன்; அவரைப் போலவே கொண்டாடுகிறேன்’: மதீஷ பத்திரன

Date:

சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன, விக்கெட் எடுத்த பின் வித்தியாசமான கொண்டாடுவது பற்றி விளக்கமளித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு தொடரில்,டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் அவர்தான்.

நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின இப்போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது சென்னை. இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பத்திரன 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

போட்டியின் போது விக்கெட் எடுத்த பின் மதீஷ பத்திரன வித்தியாசமான முறையில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். விக்கெட் எடுத்த பின் கண்களை மூடி வானத்தை நோக்கி பார்த்தவாறு சில வினாடிகள் அமைதியாக இருப்பது போன்று கொண்டாடுகிறார்.

இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்து போட்டி முடிந்த பின் தொகுப்பாளர் மதீஷவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மதீஷ, சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான எனது பயணம் கடந்த ஆண்டு தொடங்கியது. மாற்று வீரராக நான் வந்து 2 போட்டிகள் மட்டுமே விளையாடினேன். ஆனால், இந்த ஆண்டு நான் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. சென்னை அணி நிர்வாகம் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்துள்ளது. ரி20 கிரிக்கெட்டில் இது தான் எனது சிறந்த பந்துவீச்சு.. எனது ஆட்டத்தில் எனக்கு மகிழ்ச்சி. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன் (விக்கெட் எடுத்த பின்) அவரை போல் கொண்டாடுவேன்’ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்