காதலி, மனைவி, முன்னாள் காதலியின் பெயர்கள், செல்லப்பிராணிகளின் பெயர்கள், பிறந்தநாள் அல்லது “கடவுச்சொல்123” போன்றவற்றை கடவுச்சொல்லாக வைத்திருக்க வேண்டிய தேவை இனிமேல் ஏற்படாது.
கடவுச்சொல்லுக்கு கதிலாக, கூகிள் passkey எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது.
ஆகவே இனிமேல் கடவுச்சொற்கள் அவசியம் இல்லை.
பெரும்பாலான சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் விரல் ரேகை, அங்க அடையாளம், கைத்தொலைபேசி கடவுஎண் ஆகியவற்றைக் கொண்டு கணக்கினுள் செல்லமுடியும்.
passkey தொழில்நுட்பம் ஊடுருவல் முயற்சிகளுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.
passkey எப்படி வேலை செய்யும்?
ஒவ்வொரு கணக்கிற்கும் ஒவ்வொரு சாதனத்துக்கும் இரண்டு ‘சாவிகள்’ உருவாக்கப்படும்.
ஒரு ‘சாவி’ பொதுப் பார்வைக்கு வைக்கப்படும். மற்றொரு ‘சாவி’ அந்தரங்கமாக இருக்கும். அதைப் பற்றி இயங்குதளத்திற்குத் தெரியாது.
கூகிள் கணக்கிற்குள் செல்லும்போது அந்தரங்கச் ‘சாவி’யின் தகவல் கூகிளுக்கு வெளியிடப்படமாட்டாது.
Apple, Microsoft ஆகியவை இணைந்து தொழில்நுட்பத்தை உருவாக்கின.
அவை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டில், குரோம் மற்றும் ஆண்ட்ரோய்ட் இரண்டிலும் passkey அனுபவங்களைக் கொண்டுவருவது குறித்த புதுப்பிப்புகளை கூகிள் பகிர்ந்துள்ளது. 4ஆம் திகதி முதல், கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு அனுபவத்தை முயற்சிக்க விரும்பும் கூகிள் கணக்கு பயனர்களுக்கு இது ஒரு விருப்பமாக கிடைக்கும்.