நாடு முழுவதும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிவேகமாக அதிகரித்துள்ளதாகவும், டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை 31,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சமீபத்திய தரவுகள், கம்பஹாவில் 6,953 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் சுமார் 6,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதும் மழை பெய்வதால் நுளம்பு உற்பத்தி அதிகமாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு மற்றும் பணியிடங்களுக்கு அருகில் உள்ள நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சிவப்பு வலயங்களை இலக்கு வைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதை போன்றதொரு நிலை ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த ஆண்டில் கிட்டதட்ட 186,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதோடு மருத்துவமனைகளும் மருத்துவ வசதிகளும் நோயாளிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் திணறின.




