ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதுவுமே தடையில்லை எனவும், மக்கள் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார்களோ அதனை தாம் செய்வேன் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எனது மக்கள் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார்களோ அதைச் செய்வேன். நான் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரையும் சந்தித்து எனது மக்கள் நான் செய்ய வேண்டும் என விரும்புவதை நான் செய்வேன் என்று அவர்களிடம் கூறினேன்.” என்று அவர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“மே தினக் கூட்டத்தில் நான் முன்னிலைப்படுத்திய தோட்டத் துறை மக்களின் இன்னல்கள் குறித்து ஜனாதிபதியிடம் கூறினேன். நான் அவரிடம் சம்பளத்தை பற்றி சொன்னேன், மேலும் எனது பகுதியில் மொத்தம் 9000 ஹெக்டேர் கைவிடப்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும் அவரிடம் தெரிவித்தேன். இந்த விலங்குகள் மக்களுக்கும் அவர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்று நான் அவரிடம் கூறினேன். பெருந்தோட்டத் துறை மக்கள் சமுர்த்தியை இழந்துள்ளனர் என்பதையும் நான் அவரிடம் கூறினேன்” என்றார். பெருந்தோட்டங்களில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் துறை சார்ந்த அரச அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் கூட்டத்திற்கு அழைத்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். “சந்திப்பு வெற்றிகரமான ஒன்றாக நான் மதிப்பிடுவேன்,” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் நான் சந்தித்தேன், அவர் விரைவில் பதுளையில் உள்ள எனது வாக்காளர்களை சந்திப்பதாக உறுதியளித்தா என்றார்.