தையிலிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைகளை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டகளத்தில், சுமார் 4 பேர் வரையானவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
எனினும், கைதானவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லையென்றும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புமுள்ளதாக முன்னணியின் பேச்சாளர் க.சுகாஷ் சற்று முன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு செல்லும் வீதியை மறித்து பொலிசார் வீதித்தடை அமைத்துள்ளனர். அங்கு யாரும் உள்நுழைய முடியாதபடி தடையேற்படுத்தப்பட்டுள்ளதாக முன்னணியினர் குற்றம் சுமத்தினர்.
இன்று காலையில் வீதியோரம் நின்ற முன்னணியின் 2 உறுப்பினர்களும், நேற்று இரவு பந்தல் அமைக்க வந்த இருவரும் கைதாகியுள்ளதாக முன்னணி தரப்பில் கூறப்பட்டுள்ளது.