எம்பிலிபிட்டிய, பென்முவ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் விதைப்பை ஒன்று வெட்டப்பட்டதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (30) காலை ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பெங்கமுவ, தபோகல வீதியில் வசிக்கும் 53 வயதுடைய திருமணமாகாத ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் (29) இரவு மேலும் மூவருடன் மது அருந்தியதாகவும், பின்னர் இவரும் மேலும் இருவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மறுநாள் காலை மது அருந்திக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்டின் முன் இந்த நபர் படுத்திருப்பதைக் கண்டுள்ளார்.
வீட்டின் உரிமையாளர் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இதனடிப்படையில், அவருடன் மது அருந்திய வீட்டின் உரிமையாளரும் ஏனைய இருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.