Pagetamil
சினிமா

‘விடாமுயற்சி’: பிறந்தநாளில் வெளியான அஜித்தின் புதிய படத் தலைப்பு!

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 1) அவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது அப்படியே நடந்துள்ளது.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ‘ஏகே 62’ இலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பு தரப்பு கதையில் மாற்றங்களை செய்ய சொன்னதாகவும், அதற்கு விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ளாததால் படத்திலிருந்து அவர் விலகப்பட்டார் என தகவல் வெளியானது.

இந்த சூழலில் அஜித் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதனை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment