வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ் நகரில் நடைபெற்றது.
இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது.
மே தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.
உலகம் முழுவதும் மே தினம் உழைப்பாளர்கள் உரிமைக்காக கொண்டாடப்படுகின்ற நிலையில் இன்று அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஊர்வலம் இடம்பெற்றது.
இதற்காக பெருமளவு பொலிஸாரும் வீதிகளிலும் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் குறைந்தளவானவர்களே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1