27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

தகராறு செய்த மனைவிக்கு இன்சுலின் செலுத்தி கொலை முயற்சி: திருகோணமலை வைத்தியர் கைது!

இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்  கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணமாகி சில காலம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி வைத்தியரிடம் அடிக்கடி தகராறு செய்து வருபவர் என தகவல் வெளியாகி உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

அந்த வைத்தியர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய வைத்தியர், குழந்தை இல்லாத காரணத்தினால்- அடிக்கடி தகராறு செய்த காரணத்தினால், மனைவியை கொல்லும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும், உடலில் சீனி அளவைக் குறைக்க மனைவியின் உடலில் இன்சுலின் ஊசியை வலுக்கட்டாயமாக செலுத்தி மனைவியைக் கொல்ல முயன்றதாக காவல்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மயக்கமடைந்த மனைவி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா முரண்பாடு

east tamil

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

east tamil

பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

east tamil

மரணத்துடன் மறக்கப்பட்ட இரா. சம்பந்தன்

east tamil

நெல்லுக்கான நிர்ணய விலைகள் அறிவிப்பு

Pagetamil

Leave a Comment