இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக120 வாக்குகளும், எதிராக 25வாக்குகளும் அணிக்கப்பட்டன.
95 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏ.எச்.எம்.பௌசியைத் தவிர, ஏனைய அனைத்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. பௌசியும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஜேவிபி, டலஸ் அணி, விமல் அணி ஆகியவை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் அகில இளங்கே தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.



