வரலாற்றில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அதிவேக சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பிரபாத் ஜெயசூரிய படைக்க… மற்றொரு 5 விக்கெட்டை ரமேஷ் மெண்டிஸ் வீழ்த்த… பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ அனல் பறக்க வைக்க, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அயர்லாந்து இன்னிங்ஸ் வெற்றி கொண்டது இலங்கையணி.
முதல் இன்னிங்ஸில் 492 ஓட்டங்கள் குவித்து மிரட்டிய அயர்லாந்து, 5வது நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக ஆட்டமிழந்து, இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அயர்லாந்தின் ஹாரி டெக்டர் மட்டுமே கடுமையாக போராடினார். 189 பந்துகளில் 85 ஓட்டங்களை பெற்றார். ஆண்டி பால்பிர்னி 46 ஓட்டங்களை பெற்றார்.
அசிதவின் பந்துவீச்சில் ஹெல்மெட்டில் அடிவாங்கி, மைதானத்திலிருந்து வெளியேறியவர், அணி தத்தளிக்க தொடங்கியதும் மீண்டும் களத்துக்கு வந்து ஆடினார்.
காலியில் ஐந்தாவது நாளில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்ப்பது எப்போதுமே கடினமாகவே இருக்கும். ஆனால் அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் மிகவும் பாதுகாப்பாக இருந்த பிறகு, இந்த இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்டுள்ளது.
பிரபாத் ஜெயசூர்ய 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் வேகமான 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஆனார். ஆல்ஃப் வாலண்டைன், 8 டெஸ்டில் 1951ல் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். ஜெயசூர்ய 7 டெஸ்டில் (அதில் ஐந்து காலியில் விளையாடியது) இந்த சாதனையை புரிந்தார். வேகப்பந்துவீச்சாளர் வெர்னான் பிலாண்டர் 2012 இல் இந்த மைல்கல்லை எட்டினார்கள். 6 டெஸ்டில் இந்த சாதனையை புரிந்த டாம் ரிச்சர்ட்சன் மற்றும் சார்லி டர்னர் இருவரும் 1800களில் விளையாடியவர்கள்.
ரமேஷ் மெண்டிஸ் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை வீழ்த்தினார்.
அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் பவுன்சர்களால் அயர்லாந்து வீரர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 492 ஓட்டங்கள். இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களுடன் டிக்ளேர் செய்தது. அயர்லாந்து 2வது இன்னிங்ஸில் 202 ஓட்டங்னகளுக்கு ஆட்டமிழந்தது.
ஆட்டநாயகன் பிரபாத் ஜயசூரிய.



