நோர்வூட் பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் முன்னிலையில் தாக்கிய தந்தையொருவர் நோர்வூட் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான தந்தை நோர்வூட்டில் வசிப்பவர். அவரது மகள் அதே பாடசாலையில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆசிரியர் மகளுக்கு விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆசிரியர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மாணவியின் தந்தையான பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1