25.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிணையுங்கள்: கிளிநொச்சி ஊடக அமையம் அழைப்பு

அரசினால் தற்போது முன் வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்
சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும்
ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். எனவே குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக குரல கொடுக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி ஊடக அமையும் அழைப்பு விடுத்துள்ளது.

இச் சட்ட மூலம் சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்ற போது மக்களின்
உரிமைகள் சார்ந்து செய்திகள், கட்டுரைகள் எழுதுவது, முகநூல்களில்
பதிவுகள், கருத்துக்கள் தெரிவிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படையில்
போராட்டங்களை மேற்கொள்ளவது என அனைத்து ஜனநாயக செயற்பாடுகளும்,
கேள்விக்குள்ளாகும்.

எனவேதான் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக எதிவரும் 29.04.2023 அன்று
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக காலை 9 மணிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தில் சிவில் மற்றும் பொது
அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு
வலுச் சேர்க்குமாறும் கிளிநொச்சி ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

-மு.தமிழ்ச்செல்வன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Pagetamil

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

Pagetamil

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா

east tamil

17 இந்திய மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment