24.8 C
Jaffna
January 4, 2025
Pagetamil
கிழக்கு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கிலிருந்து மட்டக்களப்பு ஊடகவியலாளர் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த வழக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் சட்டத்தரணி ரணித்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி பி.ஜெசிங்கம் ஆஜராகியிருந்தார்.

ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நிகழ்வு தொடர்பாக பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 ஆம் திகதி அன்று வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

17 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 07.03.2022.ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இ

இவரது விடுதலை தொடர்பாக சர்வதேச உள்ளுர் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

Leave a Comment