ராம் இயக்கத்தில் உருவாகும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!

Date:

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ பகிர்ந்து தெரிவித்துள்ளது. இதனை நடிகர் சூரி ட்வீட் செய்துள்ளார்.

நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிக்கும் படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. இதை, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ராம் இயக்கியுள்ளார். ‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தனது ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது பரபரப்பாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி டப்பிங் பேசுவது இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்