முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி வவுனிக்குளத்தில் நீராட சென்றவேளை குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மல்லாவி பகுதியில் இடம்பெற்ற துக்க நிகழ்வொன்றுக்காக யாழிலிருந்து வந்த சகோதரர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக்கொண்டிருகும் போது நீரில் அவர் தத்தளிப்பதை கண்டு மூத்த சகோதரர் அவரை காப்பாற்ற முற்படும்போதே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் யாழ் நல்லூர் யமுனா வீதி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சுரேஷ் (16) , ரவிச்சந்திரன் சுமன் (27) ஆகிய இரு சகோதரர்களுமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு நேற்றுத்தான் பிறந்தநாள் என கூறி தாயார் கண்ணீர்விட்டு அழுதார்.
இருவரின் உடலங்களும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் பிரதீபன் சடலங்களை பார்வையிட்டதுடன், உடற்கூராய்வு பரிசோதனைக்கு பின்னர் சடலங்களை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிசாருக்கு பணித்தார்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி போலீசார் மேற்கொண்டு வருகின்றன.