விஜய் வர்மா மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் காதல் உறவில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நேற்றிரவும் அவர்கள் ஒன்றாக உணவருந்த வந்தபோது வீடியோவில் சிக்கியுள்ளனர்.
இந்த வருட புத்தாண்டில் இருவரும் கோவாவில் உதட்டு முத்தம் கொடுத்த வீடியோ பரவியது. இப்போதிருந்தே, இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பின்னர், அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக வெளியில் சுற்றும்போது வீடியோவில் சிக்கினர்.
விஜய்யும் தமன்னாவும் ஒன்றாக ஹொட்டலில் பொழுதை கழித்து விட்டு செவ்வாய் கிழமை அதிகாலையில் வெளியேறிய போது சிலரால் வீடியோ படம் பிடிக்கப்பட்டனர்.
இருவரும் ஒரே வாகனத்தில் புறப்பட்டனர். தாம் வீடியோ படம் பிடிக்கப்பட்டதை தெரிந்தும் அவர்கள் எந்த எதிர் பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாமல், கையை அசைத்து விட்டு சென்றனர்.
இருவரும் காதலிப்பதாக சில மாதங்களாக செய்திகள் பரவி வருகின்றன. எனினும், தமன்னா அண்மையில் அதை மறுத்தார். இருவரும் ஒன்றாக ஒரு படம் செய்துள்ளோம் என்றும் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதாகவும் கூறியிருந்தார். எந்த விதமான விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.



