சூடானில் சிக்கிய 41 இலங்கையர்களை மீட்கவும் இந்திய உதவிதான் தேவை!

Date:

சூடானில் சிக்கியுள்ள 41 இலங்கையர்களை மீட்பதற்கு இந்திய அதிகாரிகளின் உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும், எகிப்தின் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகமும், இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து சூடானில் சிக்கியுள்ள 41 இலங்கையர்களை அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அலி சப்ரி தெரிவித்தார்.

சூடானில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கு 41 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சும் கார்டூமில் உள்ள இந்திய தூதரகமும் இணங்கியுள்ளதாக எகிப்தின் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்