யாழ். பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர்.
கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அன்ரனிபுரம் பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு வயது 21 எனவும் அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை மர்மமான படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இந்த கஞ்சா கடற்படையின் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 80 லட்சத்துக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா கடத்தலுடன் உடுத்துரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனுக்கு இரண்டு பியர்களை வாங்கி கொடுத்துவிட்டு பிரதான கஞ்சா கடத்தல் நபர் இந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.