யாழ்ப்பாண வலய சட்டத்தரணிகள் நாளைய தினம் வடகிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்தாலிற்கு பூரண ஆதரவு தெரிவித்து யாழ் வலய நீதிமன்றங்களில் ஆஜராகமாட்டார்கள் என அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க யாழ்ப்பாண வலய தலைவரும் யாழ்ப்பாண நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கதலைவருமான பாலசுப்பிரமணியம் தவபாலன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்தாலிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ் வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்,பருத்தித்துறை, சாவகச்சேரி,மல்லாகம் ஆகிய ஐந்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் ஆஜராகாது பூரண ஆதரவினை இவ் ஹர்தாலிற்க வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி சட்டத்தரணிகளும் நாளை வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதில்லையென்ற முடிவை எடுத்துள்ளனர்.