பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்-அம்பாறையில் போராட்டம்

Date:

இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வேண்டாம் என்று கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று (20) வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது .

அதன் போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

ரௌடி கோபுவிடமிருந்து எம்மை காப்பாற்றுங்கள்: மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு...

தவறான உறவு சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த கணவன்!

மனைவி தனது உறவினரான இளைஞர் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக...

கோட்டாபயவின் பயணத்தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வௌிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்