நிந்தவூரில் போதைப்பொருள் பாவித்த 9 பேர் கைது!

Date:

புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேர்மன் நட்புறவு பாடசாலை அருகில் உள்ள பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக பலர் நடமாடுவதாக பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் சுற்றிவளைப்பு புதன்கிழமை(12) இரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 9 சந்தேக நபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடி ஆளடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்