அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு!

Date:

அடுத்த வாரம் காலியில் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் போது திமுத் கருணாரத்ன இறுதி முறையாக அணியை வழிநடத்துவார்.

மூத்த வீரர்களான அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

எனினும் பதும் நிஸங்க, ஓஷத பெர்னாண்டோ மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு இடமில்லை.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, துஷான் ஹேமந்த மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அயர்லாந்து தேசிய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தது.

இலங்கை-அயர்லாந்து அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.

முன்னதாக திட்டமிட்டபடி ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு பதிலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது என இலங்கை கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அயர்லாந்துக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 16ஆம் திகதி தொடங்குகிறது.

இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டமும் இதே மைதானத்தில் ஏப்ரல் 24ஆம் திகதி ஆரம்பிக்கும்.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்