பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (12) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை அல்லேரவ பிரதேசத்தில் வசிக்கும் சுந்தரலிங்கம் பிரவின் எமன்ஷன் மற்றும் பலாங்கொடை செக்னோல் பகுதியைச் சேர்ந்த ஜீவராஜ் அனுஷ் ஆகிய 15 வயதுடைய இரு மாணவர்களின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் பலாங்கொடை தேசிய பாடசாலை மற்றும் பலாங்கொடை தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு சென்றுவிட்டு நேற்று பிற்பகல் நீராடச் சென்ற போது, ஆற்றில் மூழ்கினர்.