25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

ஊடக நிறுவனங்களுக்கு நுழைந்து அச்சுறுத்துவது ஆரோக்கியமானதல்ல – கிளிநொச்சி ஊடக அமையம்

இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள்,
அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதிலும் தமிழ் ஊடகங்கள்,
ஊடகவியலாளர்கள் நிலைமை மேலும் மோசமானதாக காணப்படுகிறது. இந்த நிலையில்
எம் இனத்திற்குள்ளேயே நாம் ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல்
விடுக்குமளவுக்கு ஊடக நிறுவனங்களுக்குள் அத்துமீறி உள்நுழைத்து
செயற்படுவது கண்டிக்கத்தக்கது என கிளிநொச்சி ஊடக அமையம் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் ஊடக நிறுவனத்திற்குள்
அத்துமீறி உள்நுழைந்த ஒரு மத அமைப்பைச் சேர்ந்த தரப்பினர்கள் ஊடக
செயற்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு, அடாவடித்தனத்திலும்
ஈடுப்பட்டனர். இச் செயற்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது. ஊடகங்களில்
வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது அல்லது அவதூறானது என கருதும்
தரப்பு அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர
வன்முறையில் ஈடுப்படுவது, அச்சுறுத்துவது என்பன அனுமதிக்க முடியாத
செயற்பாடுகள்.

நீண்ட காலமாக பல்வேறு நெருக்கடிக்குள் தனது ஊடக செயற்பாடுகளை
முன்னெடுத்துவரும் உதயன் பத்திரிகையின் அலுவலகத்திற்குள் உள்நுழைந்து
அச்சுறுத்தும் வகையில் ஒரு குழுவினர் நடந்துகொண்டமை கவலையளிப்பதோடு,
அதற்கு நாம் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துகொள்கின்றோம். மேலும் மதத்
தலைவர்கள் சமூகங்களை அமைதியின் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்
வன்முறைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதனையும் கிளிநொச்சி
ஊடக அமையம் வலியுறுத்துகிறது என அவ்வறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment