பிஃபா தரவரிசையில் 6 வருடங்களுக்குப் பிறகு அர்ஜெண்டினா முதலிடம்: இலங்கை 207வது இடம்!

Date:

பிஃபா தரவரிசை பட்டியலில் 6 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது உலக சம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி.

அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அணி 6 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதேவேளையில் கடந்த மாதம் இறுதியில் மொரோக்கோவிடம் தோல்வி அடைந்த பிரேசில் அணி தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிஃபா உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரான்ஸ், தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தகுதி சுற்றில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி கண்டிருந்தது.

பெல்ஜியம் 4வது இடத்தில் தொடர்கிறது. இத்தாலி உள்ளிட்ட இரு அணிகளுக்கு எதிராக சமீபத்தில் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி 5வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து, குரோஷியா, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய அணிகள் முறையே 6 முதல் 10வது இடங்களில் உள்ளன.

ஸ்பெயின், போர்த்துக்கலுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள மொராக்கோ 11வது இடத்தில் தொடர்கிறது.

அதேவேளையில் 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்த உள்ள அமெரிக்கா 13வது இடத்திலும், மெக்சிகோ 15வது இடத்திலும், கனடா 6 இடங்கள் முன்னேறி 47வது இடத்தையும் பிடித்துள்ளன.

சுவிற்சர்லாந்து 12, ஜேர்மனி 14வது இடத்தில் உள்ளன.

ஆசிய அணிகளில் ஜப்பான் 20வது இடத்தை பிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்திய கட்டார் 61வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அணி 207வது இடத்தில் உள்ளது. கால்ப்பந்து தரவரிசையில் மொத்தமாக 211 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கைக்கு பின்னால் யுஎஸ் விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், அங்குவிலா, சான் மரினோ ஆகிய நாடுகள் மாத்திரமே உள்ளன.

இந்திய கால்பந்து அணி 5 இடங்கள் முன்னேறி 101வது இடத்தை பிடித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்