சீனாவில் ஒருவர் கால் முறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது 30 பன்றிகளுடன் காதலி ஓடிச்சென்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த லு என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த நபர், கடந்த ஆண்டு முதல் தாங்கள் ஒன்றாக வளர்த்து வந்த பன்றிகளுடன் நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்த தனது காதலி ஓடிப்போய் விட்தாக சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
“நீங்கள் எல்லாம் பச்சைச் சீனர்களாக இருந்தால் அந்த காதல் துரோகியை கண்டால் நாக்கைப் பிடுங்குவதை போல நாலு கேள்வி கேளுங்கள்“ என நமது பச்சைத் தமிழர்கள் பாணியில் அவரும் காதலியை கரித்துக் கொட்டியுள்ளார்.
லூ திருமணமாகி மனைவியை இழந்தனர். அவர் 2019ஆம் ஆண்டில் சியோங்கைச் சந்தித்தார். அவர் விவாகரத்தானவர். இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வசப்பட்டனர்.
பொதுவாக பண விஷயத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்தாலும், தாம் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்தோம் என்று தான் நினைத்ததாக லூ கூறினார்.
இருப்பினும், திருமணம் செய்து கொள்ளுவோம் என லு கேட்ட போது, சியோங் மறுத்து விட்டார்.
“நாங்கள் திருமணத்திற்கு பதிவு செய்கிறோமா இல்லையா என்பது முக்கியமில்லை என்று அவள் என்னிடம் சொன்னாள். அவள் அதை செய்ய விரும்பாததால், நான் அவளை கட்டாயப்படுத்த விரும்பவில்லை.” என்றார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், தம்பதியினர் பன்றி வளர்ப்புத் தொழிலைத் தொடங்க 80,000 யுவான் வங்கிக் கடனைப் பெற்றனர், அதில் தாங்கள் ஒன்றாக வேலை செய்ததாக லூ கூறினார்.
அண்மையில், லு தனது கால்கள் உடைத்ததால் மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தபோது காட்சி மாறியது.
மருத்துவமனையில் லு வை பார்ப்ப சியோங் வரவில்லை. மனைவி தொழில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார், பண்ணை பராமரிப்பில் மும்முரமாக இருந்ததால் பார்க்க வர முடியவில்லைபோல என லு அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்.
என்றாலும், தனது தொலைபேசி அழைப்பையும் சியோங் ஏற்காமல் விட்டதை தொடர்ந்துதான், ஏதோ சிக்கலிருப்பதாக லு நினைக்க ஆரம்பித்தார்.
“எனது அழைப்புகளை நீங்கள் எடுக்கவில்லை, ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று WeChat சமூக ஊடகத்தில் சியோங்கிற்கு அவர் தகவல் அனுப்பினார்.
“இந்த செய்தியை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து எனக்கு பதிலளிக்கவும். நன்றி.” என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், சியோங்கிடமிருந்து பதில் வரவில்லை, அவர் வீடு திரும்பியதும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்.
“அவள் 30 பன்றிகளுடன் ஓடி விட்டாள்,” என்று அவர் கூறினார்.
பன்றிகளின் மதிப்பு 100,000 யுவானுக்கு அதிகமாக இருப்பதாகவும், வங்கிக் கடனும், அறுவை சிகிச்சைக் கட்டணமாக சுமார் 50,000 யுவான்களும் சேர்ந்து, அவரை நிதி நெருக்கடியில் ஆழ்த்தியதாகவும் லு கூறினார்.
இருந்த போதிலும், என்ன நடந்தது என்பதை விளக்க சியோங் திரும்பி வருவார் என நம்புவதாக லு கூறினார்.
“அவள் என்னுடன் வாழ விரும்பவில்லை என்றால், நான் அவளை வற்புறுத்த மாட்டேன்,” என்று அவர் கூறினார்.
லு வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது.