கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சாரதியின் கடடுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த ஆணுக்கும், பெண்ணுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை விபத்து தொடர்பில் காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1