இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் கைது!

Date:

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த பெண் பயணிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டு, அவரை தனி அறைக்குஅழைத்து சென்று சோதனை செய்ததில் ரூ.37.25 லட்சம் மதிப்புள்ள 725 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதேபோல், இலங்கையில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் ரூ.35.82 லட்சம் மதிப்புள்ள 697கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இருவரிடம் இருந்து ரூ.73.07 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்