தெலுங்கில் வில்லனாக பிரபலமாக இருக்கும் போஜ்புரி நடிகர் ரவி கிஷனுக்கும், முன்னாள் நடிகை நக்மாவுக்கும் காதல் இருப்பதாக சில காலமாக நிலவிய கிசுகிசு தொடர்பில், ரவி கிஷன் சமீபத்தில் விளக்கமளித்துள்ளார்.
இருவரும் பல பிளாக்பஸ்டர் படங்களில் இணைந்து நடித்ததால் தான் இந்த வதந்திகள் வந்ததாக அவர் விளக்கினார்.
வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கைக்குப் பிறகு அரசியலுக்கு வந்த தெலுங்கு வில்லன் ரவி கிஷன், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நக்மாவுடனான தனது வதந்தியான உறவு குறித்து மௌனம் கலைத்தார்.
ரவி கிஷன் கூறும்போது, “இருவரும் நல்ல நண்பர்கள், இதனால் அதிக படங்களில் நடித்துள்ளோம். நான் திருமணமானவன் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. என் மனைவி ப்ரீத்தி சுக்லாவை நான் மிகவும் மதிக்கிறேன். என் மனைவி ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் இருக்கிறார். என்னிடம் பணம் இல்லாத நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார். ஆனால் எனது படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், நான் மிகவும் பெருமைப்பட்டேன், அந்த நேரத்தில் என் மனைவி என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல பரிந்துரைத்தார். முதலில் எனக்கு பிடிக்கவில்லை ஆனால் பின்னர் சென்றேன். மூன்று மாதத்தில் எனக்கு நிறைய மாற்றம் வந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் பிரபலமானது மட்டுமின்றி ஒரு மனிதனாக நிறைய மாறி சாதாரண மனிதனாக மாறினேன். அதன்பிறகு எனது குடும்பத்தையும் மனைவி குழந்தைகளையும் நன்றாக கவனித்துக்கொண்டேன்“ என்றார்.