நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜையுடன் படத்தின் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளன.
தெலுங்கில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர், கார்த்தியின் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அடுத்து விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார்.
‘குட் பாய்’ படம் மூலம் இந்தியிலும் இவர் அறிமுகமானார். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜை நாளை நடைபெறுகிறது. பெண் மைய கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு நாளை அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.