27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பு தனித்து அஞ்சலி

தந்தை செல்வாவின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே சிவஞானம் உள்ளிட்ட சிலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் நடந்த அஞ்சலியில் தமிழ் அரசு கட்சியினர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும், அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் நடக்கும் அஞ்சலி நிகழ்விலேயே சீ.வீ.கே.சிவஞானம் கலந்து கொள்வார்.

தற்போது கட்சிக்குள் அதிருப்தியடைந்து முக்கிய சந்திப்புக்களை தவிர்த்து வரும் சீ.வீ.கே, தனித்து அஞ்சலி செலுத்தினார்.

யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக பத்திரிகையாளர் வித்தியாதரனை அறிவிக்க வேண்டுமென சீ.வீ.கே செயற்பட்டார். எனினும், சுமந்திரன் தரப்பில் அதற்கு இணக்கம் தெரிவிக்காததால் சீ.வீ.கே.சிவஞானம், வித்தியாதரன் அதிருப்தியடைந்திருந்தனர்.

அவர்கள் இருவரும் இன்று தனித்து வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் வலி வடக்கு முன்னாள் பிரதேசசபை தவிசாளர் ச.சுகிர்தனும் வந்திருந்தார்.

கடந்த உள்ளூராட்சிசபை வேட்பாளர் நியமனத்தில் யாழ், திருகோணமலை மாவட்டங்களில் கட்சித்தலைமையின் முடிவை மீறி தன்னிச்சையான- குழப்பகரமான சூழல் நிலவியது. இது தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தன்னிச்சையான நியமனத்தை மேற்கொண்ட குழுவினரில் சுகிர்தனும் ஒருவர். அவரும் ஒழுக்காற்றுக்குழு விசாரணையை சந்திக்கவுள்ளார். அவரும் இந்த குழுவினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

Leave a Comment