RX 100 படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பாயல் ராஜ்புத். இந்தப் படத்தின் மூலம் திரை வாய்ப்புக்களை பெற்று இன்று முன்னணி நாயகியாகி விட்டார்.
இவர், சமீபத்தில் கையில் சேலைன் போத்தலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தான் பெரிய தவறு செய்துவிட்டதாக ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பயல், தனக்கு அதிகம் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை என்றும், அதனால் தான் நீரிழப்பு காரணமாக சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது வீட்டில் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும், தற்போது தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், மீண்டும் மீண்டு வருவதற்கான அனைத்து தடைகளையும் நீக்கி முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீங்களும் என்னைப் போல் தண்ணீர் குறைவாக குடித்து தவறு செய்யாதீர்கள் என்றும், நிறைய தண்ணீர் குடிக்குமாறு ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய அவர், எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் படப்பிடிப்பு நிற்காமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக கூறியுள்ளார்.




