மட்டக்களப்பு இந்துக் கல்லூரி நிர்வாகத்தை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ அமைப்பை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது அகில இலங்கை சைவ மகா சபை.
இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்ட அறிக்கையில்,
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற இருந்த மத மாற்ற பிரசாரக் கூட்டம் சைவ அமைப்புக்ளின் அழுத்தத்தை அடுத்து பாடசாலை சமூகத்தால் நிறுத்தப்பட்டது அறிந்ததே.
தற்போது நிகழ்வு நடாத்துவதற்கு அனுமதி அளிக்கவிட்டால் 5 கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என கிறிசுதவ கூட்டமைப்பு எனும் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த தருணத்தில் பாடசாலை சமூகத்திற்கும் மட்டக்களப்பு சைவ சமயிகளிற்கும் எம் பூரண ஆதரவை வெளிப்படுத்துகின்றோம். இவ்வாறான செயல்கள் மத நல்லிணக்கத்திற்கு பாரதூரமாக பங்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டி காட்டுகின்றோம்.
தொடர்ச்சியாக சைவ சமய விழுமியங்களை சுதேச சிவபூமியில் அன்பே உருவான எம் பரம்பொருள் தமிழர் கண்ட பிரபஞ்ச இயக்க சிவ வடிவம் நடராசர் சிலை திறப்பை விமர்சித்து பத்தி எழுதி வரும் ஊடகவியலாளர் ஒரு தொகுதியினர் மத மாற்ற கும்பல்கள் வெளிநாடுகளிலிருந்து போதகர்களை மிக பெரும் நிதி செலவுடன் கொண்டு வந்து சுதேசிகளை மத மாற்ற முற்படும் செயலைப் பற்றிய வாய்திறக்காதது மிகுந்த விசனத்தையும் தோற்றுவிக்கின்றது.
தமிழ்ச் சைவர்களின் கரிசனைகள் தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டு ஆழமான மன வடுக்கள் தோற்றுவிக்கப்பட்டால் அதன் விளைவுகள் பற்றி காரணமான சகலரும் இந்த சந்தர்ப்பத்தில் சிந்திக்குமாறு மீள வலியுறுத்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.