புஷ்பா 2 – பெங்களூருவில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் காட்சிகள் படப்பிடிப்பு

Date:

‘புஷ்பா: தி ரூல்’படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் முக்கியமான காட்சிகள் பெங்களூருவில் படமாக்கப்பபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். முதல் பாகம் வெற்றிப்பெற்ற அடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிறிய இடைவெளிக்குப்பின் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் விரைவில் பெங்களூருவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியில் அல்லு அர்ஜுனும், ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கெனவே, ஃபஹத் ஃபாசில் படப்பிடிப்பு ஒன்றிற்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வருகிற ஏப்ரல் 8ஆம் திகதி அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த 3 நிமிட கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் எனவும் தகவல் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்