Pagetamil
இலங்கை

2022 இல் இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதமாக சுருங்கியது

இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டை விட 2022 இல் 7.8 வீதத்தால் சுருங்கியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 13,037,934 மில்லியன் பதிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 12,017,849 மில்லியனாக பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் முறையே 4.6 சதவீதம், 16.0 சதவீதம் மற்றும் 2.0 சதவீதம் குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ. 2,917,721 மில்லியனாக பதிவாகி, 12.4 சதவிகிதம் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது. 2021 ஆம் ஆண்டில் ரூ. 3,331,073 மில்லியன் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியானது குறிப்பிடத்தக்க வீதத்தில் வீழ்ச்சியடைந்தமை, வட்டி வீதத்தை அதிக விகிதத்திற்கு அதிகரிப்பு, விநியோகப் பக்கச் சீர்குலைவுகள் உள்ளிட்ட காரணங்களினால் இந்த வீழ்த்தி பதிவாகியுள்ளதாக,  மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment