இலங்கையில் இரண்டு பதிய வகை பல்லிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் எத்தகல மற்றும் குருநாகல் மாவட்டத்தில் கல்கிரிய ஆகிய மலைக்காடுகளின் குன்றுகளில் இந்த பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் எத்தகலவில் காணப்படும் பல்லிக்கு Jayaweera’s day gecko – cnemaspis Jayaweerai என்றும், கல்கிரியில் காணப்படும் பல்லிக்கு Nanayakkara’s day gecko – cnemaspis nanayakkara என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புடன், இலங்கைக்கு சொந்தமான பகலில் உலாவும் பல்லி இனங்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பல்லி இனங்களின் எண்ணிக்கை 65 ஆக உயரும்,
இந்த இரண்டு பல்லி இனங்களும் அழிவடையும் அபாயத்திலுள்ள இனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1