27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

சரியாக சல்யூட் அடிக்காததற்காக இளம் பெண் பொலிஸாரை திட்டிய அதிகாரிக்கு எதிரான விசாரணை!

தொப்பிகளை அணியாமல் கைகளில் வைத்திருந்ததும், சரியாக சல்யூட் அடிக்காததற்காகவும் பலர் பார்த்துக் கொண்டிருந்தபோது நான்கு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களை சரமாரியாக திட்டிய சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகிறதா இல்லையா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பெண் உத்தியோகத்தர்களை பார்வையாளர்கள் முன்னிலையில் சங்கடப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்ட போதே ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 10 ஆம் திகதி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் இரண்டு உத்தியோகத்தர்கள் மற்றும் களஞ்சியப்பிரிவு, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக எழுத்தரான நான்கு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பாணந்துறை தெற்கு பொலிஸ் மகளிர் விடுதியில் இருந்து பாணந்துறை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment