மெக்சிகோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள மதுக்கடை ஒன்றில் துப்பாக்கி ஏந்திய குழு ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏழு பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 11 மணியளவில் (0500 GMT) செலாயா மற்றும் குவெரெட்டாரோ நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையிலுள்ள Apaseo el Grande நகரத்தில் உள்ள “El Estadio” மதுபான விடுதியில் ஆயுதம் ஏந்திய ஒரு குழுவினர் உள்ளே நுழைந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். .
கொல்லப்பட்ட 10 பேரில் 3 பேர் பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ருவிட்டர் மூலம் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குவானாஜுவாடோ மெக்சிகோவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒரு வளமான தொழில்துறை பகுதி, இப்போது நாட்டின் இரத்தக்களரி மாநிலமாக மாறியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் எரிபொருள் திருட்டை நடத்துவதற்காக மாநிலத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த போட்டியிடும் குற்றக்கும்பல்களுக்கு இடையேயான இரத்தக்களரியான போர் நடந்து வருகிறது.
சமீபத்தில், நான்கு அமெரிக்கர்கள் இந்த மாத தொடக்கத்தில் மெக்சிகோ நகரமான Matamoros இல் கடத்தப்பட்டனர். அவர்கள் மருத்துவச் சுற்றுலாவுக்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது போட்டி குற்றக் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் அவர்கள் சிக்கிக் கடத்தப்பட்டனர்.
அவர்களில் இருவர் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர், மேலும் இருவர் இறந்து கிடந்தனர். மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார்.
மாடமோரோஸில் உள்ள குற்றக்குழு ஒன்று கொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டு, அவர்கள் குற்றவாளிகள் என்று கூறும் நபர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். “தங்கள் சொந்த முடிவில், ஒழுக்கமின்மையின் கீழ் செயல்பட்டனர்” என்று கூறினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டெக்சாஸ் அதிகாரிகள் அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக ஸ்பிரிங் பிரேக் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கு, மெக்சிகோவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் ஸ்டீவன் மெக்ரா ஒரு அறிக்கையில், “போதைப்பொருள் கடத்தல் வன்முறை மற்றும் பிற குற்றச் செயல்கள் இப்போது மெக்ஸிகோவைக் கடக்கும் எவருக்கும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தலைக் குறிக்கின்றன.



