கிறிஸ்ட்சேர்ச் டெஸ்ட்டில் வெற்றியடைய நியூசிலாந்திற்கு 285 வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலோ மத்யூஸின் சதத்தின் உதவியுடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 302 ஓட்டங்களை சேர்ந்தது.
போட்டியின் நான்காம் நாளான இன்று இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றது. அஞ்சலோ மத்யூஸ் 115, தனஞ்ஜய டி சில்வா 47, தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களை சேர்த்தனர்.
நேற்றைய 3வது நாளில் 95/4 என தடுமாறிய இலங்கை, இன்று காலையில் 200/5 என ஓரளவு பாதுகாப்பான நிலைமையில் இருந்தது. 5வது விக்கெட்டாக சந்திமால் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, ஓரளவு சீராக மற்றைய விக்கெட்டுக்களும் வீழ்ந்தன.
பின்வரிசையில் தனஞ்ஜய டி சில்வா மட்டும் தாக்குப்பிடித்து ஆடினார்.
ரிக்னர் 100/4, மட் ஹென்ரி 71/3 என விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி 285 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ள நியூசிலாந்து அணி, 9/1 என ஆடி வருகிறது.