தேர்தலுக்கு பணமில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிகிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கும் தன்னிடம் பணம் இல்லை என ஜனாதிபதி கூறினால் என்ன செய்வது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பணம் இல்லையா, வாக்குகள் இல்லையா? இந்த பயம் தேர்தலுக்காக அல்ல தேர்தல் முடிவுக்காக.அதனால் தான் பணம் இல்லை என்கிறார்கள். அந்த கதை பொய்யானது.
எட்டாயிரம் உள்ளூராட்சிசபை உறுப்பினர்களின் செலவை தாங்க முடியவில்லை என்றால், அவர்களின் கொடுப்பனவை பாதியாகவோ 75 சதவீதமாகவோ குறைப்போம்” என்று அனுர திஸாநாயக்க கூறினார்.




